கடத்தூர் வெற்றிலை சந்தையில் குவிந்த விவசாயிகள்: ரூ.3 லட்சம் வர்த்தகம்

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே கடத்தூரில் நடைபெற்ற வெற்றிலை வாரச்சந்தையில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் பங்கேற்றனர். நேற்று (ஆகஸ்ட் 17) நடைபெற்ற இந்தச் சந்தையில், 128 கட்டுகள் கொண்ட ஒரு மூட்டை வெற்றிலை ரூ. 13,000 முதல் ரூ. 15,000 வரை விற்பனையானது. மொத்தம் 20 மூட்டை வெற்றிலைகள் சுமார் 3 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி