தர்மபுரி: கேபிள்டிவி ஆப்ரேட்டர்கள் பொது நலசங்கத்தின் பொன்விழா

தமிழக கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் பொது நல சங்கத்தின் பொன்விழா ஆண்டின் மாநாடு மாவட்டத் தலைவர் சேட்டு தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை தர்மபுரி ரோட்டரிஹாலில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக நிறுவனத் தலைவர் சகிலன் கலந்து கொண்டு உயிரிழந்த கேபிள் டிவி ஆப்ரேட்டர்களின் திருவுருவப் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து தேர்வு செய்யப்பட்ட 2026 ஆண்டுக்கான தலைவர் செயலாளர் பொருளாளர் உள்ளிட்ட பொறுப்பாளர்களை கௌரவப்படுத்தினார். மாநாட்டில் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி