வலுவடைந்தது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி

மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி, அடுத்த சில மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, தெற்கு ஒரிசா மற்றும் வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் நாளை மறுதினம் காலை கரையை கடக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தொடர்புடைய செய்தி