மகாராஷ்டிரா: சந்தோஷ் - ராதா (22) தம்பதிக்கு இரட்டை குழந்தைகள் உள்ளனர். சமீப காலமாக வீடு கட்ட உன் தந்தையிடன் ரூ.2 லட்சம் பணம் வாங்கி வா என கூறி ராதாவின் மாமனார், மாமியார் அவரை கொடுமைப்படுத்தி வந்தனர். ஆனால் ஏழ்மையான சூழ்நிலை காரணமாக தந்தையால் பணம் தர முடியாது என ராதா கூறியும் மாமனார் மோசமாக துன்புறுத்தி வந்தார். இதனால் மனமுடைந்த ராதா குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.