தவெக 2வது மாநில மாநாட்டிற்காக வருகை தந்துள்ள தவெக தொண்டர்கள், வெயிலின் தாக்கம் காரணமாக வாழை தோப்புக்குள் தஞ்சம் புகுந்து வாழை இலையில் படுத்து தூக்கம் போட்டுள்ளனர். மதுரை பாரபத்தியில் 500 ஏக்கரில் பிரம்மாண்ட மாநாடு நடந்து வருகிறது. கடும் வெயில் வாட்டி வதைக்கும் நிலையில், தொண்டர்கள் அருகில் உள்ள வாழை தோப்புக்குள் தஞ்சம் அடைந்தனர். தொடர்ந்து மாநாடு தொடங்கும் நேரத்தில் சரியாக மேடைக்கு அருகே வந்தனர்.