கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த சு. கீரனூர் கிராமத்தைச் சேர்ந்த மனோஜ்குமார், கடந்த 25 ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் விருத்தாசலம் - சிதம்பரம் சாலையில் சென்றபோது, வி. குமாரமங்கலம் அருகே அடையாளம் தெரியாத ஆண் நபர் மீது மோதியதில் அவர் படுகாயமடைந்தார். தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அந்த நபர் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இது தொடர்பாக வி. குமாரமங்கலம் வி. ஏ. ஓ கீதா அளித்த புகாரின் பேரில் கம்மாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.