வேப்பூர்: விவசாயியை தாக்கி பணம் வழிப்பறி

கடலூர் மாவட்டம் வேப்பூர் கட்சி மயிலூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராமலிங்கம் (55), நேற்று (மே 7) மதியம் வேப்பூரில் உள்ள ஒரு வங்கியில் இருந்து 2 லட்சத்து 95 ஆயிரம் ரூபாயை எடுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்றார். பொயனப்பாடி அருகே சென்றபோது, 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர் அவரை வழிமறித்து தாக்கி, பணத்தைப் பறித்துச் சென்றனர். இது குறித்து ராமலிங்கம் சிறுபாக்கம் போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்டவர்களைத் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி