கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த பெண்ணாடம் அருகே உள்ள இறையூர்-கொத்தட்டை ரோட்டில் உள்ள பெட்டிக்கடைகளில் பெண்ணாடம் காவல் துறையினர் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்று சோதனை செய்தனர். அதில் கூடலூர் கிராமத்தை சேர்ந்த பொன்னுசாமி மகன் முத்து என்பவர் பெட்டிக்கடையில் சோதனை செய்தபோது அங்கு தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து முத்துவை கைது செய்த காவல் துறையினர் அவரிடம் இருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.