கடலூர் மாவட்டம் வேப்பூர் தணியார் திருமண மண்டபத்தில் நல்லூர் வடக்கு ஒன்றிய திமுக செயற்குழு கூட்டம் ஒன்றிய செயலாளர் பாவாடை கோவிந்தசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் 'என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி' என்ற கருத்தை வலியுறுத்தப்பட்டது. முகவர்கள், மாவட்ட ஒன்றிய கழகம் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் பலர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.