கடலூர் ஆவினன்குடி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் மற்றும் காவலர் இமாம் உசேன் ஆகியோர் குடிபோதையில் காரை ஓட்டிச் சென்று சாலையில் நின்றிருந்த 4 பேர் மீது மோதி விபத்தை ஏற்படுத்தினர். இந்த விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குடிபோதையில் வாகனம் ஓட்டி மரணத்தை ஏற்படுத்திய இருவரையும் கடலூர் எஸ்பி ஜெயக்குமார் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.