கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே லக்கூர் கைகாட்டி பகுதியில், சேலத்தில் இருந்து வளைகாப்பு நிகழ்ச்சிக்கு வந்த சுற்றுலா வேன், பென்ஸ் கார் முந்திச் செல்ல முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. இதில் வேனில் பயணம் செய்த 22 பேரில் 8 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் என மொத்தம் 10 பேர் காயமடைந்தனர். இராமநத்தம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.