நெய்வேலி: கத்தியை காட்டி மிரட்டிய 2 பேர் கைது

நெய்வேலி 28 வது வட்டம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், வீச்சரிவாளுடன் பொதுமக்களை அச்சுறுத்தி ஆபாசமாக பேசிய 4 பேரை தடுத்தனர். அப்போது, அவர்கள் சப்-இன்ஸ்பெக்டரை திட்டி, அரசு பணி செய்ய விடாமல் தடுத்து, கத்தியைக் காட்டி மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக, நெய்வேலி 21 வது வட்டத்தைச் சேர்ந்த விஜய் (19) மற்றும் ஒரு 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டனர். தப்பி ஓடிய கவுதம், ஹரிஷ் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி