குள்ளஞ்சாவடி: பெண்ணை திட்டியவர் மீது வழக்கு

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே பெரியகாட்டுசாகை பகுதியில் வசிக்கும் கீதாவுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த குமார் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில், மீண்டும் ஏற்பட்ட தகராறில் குமார், கீதாவை ஆபாசமாகத் திட்டியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக கீதா அளித்த புகாரின் பேரில், குள்ளஞ்சாவடி போலீசார் குமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி