கீழ்காங்கேயன்குப்பம்: பள்ளி வகுப்பறை திறந்து வைப்பு

கடலூர் மாவட்டம் நெய்வேலி சட்டமன்ற தொகுதி கீழ்காங்கேயன்குப்பம் ஊராட்சி நடுநிலை பள்ளியில் கனிம வளத்துறை நிதி (DMF) 38 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பறைகள் கொண்ட பள்ளி கட்டிடத்தினை இன்று மாணவர்கள் பயன்பாட்டிற்கு நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா. இராசேந்திரன் எம்எல்ஏ திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி