நெய்வேலி அருகே சிறுமியை கிண்டல் செய்த வாலிபர் கைது

கடலூர் மாவட்டம் நெய்வேலி அடுத்த வடக்கு மேலூர் செட்டிகுளம் பகுதியை சேர்ந்த மோகன்தாஸ் மகன் டேவிஸ் பிரவீன். இவர் ஒரு கிராமத்தை சேர்ந்த 15 வயதுடைய சிறுமியை கிண்டல் செய்ததாக தெரிகிறது.

இது குறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். இதையடுத்து அந்த சிறுமியின் பெற்றோர் நெய்வேலி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து டேவிஸ்பிரவீனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி