கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ரயிலடி விநாயகர் கோவில் அருகில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் ஆடி மாத கடைசி சனிக்கிழமையையொட்டி சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. சுவாமிக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு வெற்றிலை மாலை சாற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.