கடலூர் - விருத்தாசலம் தேசிய நெடுஞ்சாலையில், குறிஞ்சிப்பாடி செங்கால் ஓடை அருகே உள்ள மின் கம்பத்தைச் சுற்றி அதிக அளவில் புதர் செடிகள் மண்டி காணப்படுகின்றன. இதனால் அப்பகுதியில் அடிக்கடி மின்விபத்து ஏற்பட்டு மின்தடை ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மின் கம்பத்தில் உள்ள புதர்களை உடனடியாக அகற்ற வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.