கடலூர்: கார் மோதி தொழிலாளி மகள் பலி

காட்டுமன்னார்கோவில் அருகே ரம்ஜான் தைக்காலில் உள்ள கலைஞர்நகரைச் சேர்ந்த தொழிலாளி கணேஷ், தனது மகள் கமலியுடன் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். வீரானந்தபுரம் பகுதியில் கார் மோதியதில் இருவரும் காயமடைந்தனர். சிகிச்சை பலனின்றி கமலி பரிதாபமாக உயிரிழந்தார். காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி