கடலூர் மாவட்டம், குமாரகுடி பகுதியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில், காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளருமான சிந்தனைச்செல்வன் எம்எல்ஏ பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில், கர்ப்பிணிப் பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களும், முதியோர்களுக்குத் தேவையான மருந்து மாத்திரைகளும் வழங்கப்பட்டன.