கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி சௌமியா தமிழ்நாடு அளவில் நடைபெற்ற கலை திருவிழாவில் முதலிடத்தில் தேர்ச்சி பெற்றார். கடந்த வாரம் மார்ச் 8ஆம் தேதி மகளிர் தினத்தில் முதல்வர் பரிசு மற்றும் நினைவு கோப்பை வழங்கப்பட்டது. இந்த நிலையில் அவரது பள்ளியில் காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச் செல்வன் எம். எல். ஏ நேரில் சென்று மனமகிழ்ச்சியோடு வாழ்த்தினார்.