கடலூர் மாவட்டம் சிதம்பரம் தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோயிலில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று (நவ.3) குடமுழுக்கு விழா கோலாகலமாக நடைபெற்றது. யாகசாலை பூஜைகள் தொடர்ந்து 8 கால பூஜைகள் நிறைவடைந்து, புனித நீர் கலசங்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கோபுர கலசங்களில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.