சிதம்பரம் அருகே நக்கரவந்தன்குடியைச் சேர்ந்த அஜித் (19), அதே கல்லூரியில் படிக்கும் 18 வயது மாணவியை ஓராண்டாக காதலித்து வந்துள்ளார். கொடியம்பாளையம் கடற்கரைக்கு அழைத்துச் சென்று உல்லாசம் அனுபவித்ததில் மாணவி தற்போது 6 மாத கர்ப்பமாக உள்ளார். இது குறித்து மாணவியின் பெற்றோர் சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன் பேரில் அஜித் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.