சிதம்பரம் நடராஜர் கோயிலில் பிரம்மாண்டமான கொலு

உலகப் பிரசித்தி பெற்ற கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜா் கோயில் கல்யாண மண்டபத்தில் நவராத்திரி கொலு உற்சவத்தை முன்னிட்டு‌ 21 அடி உயரமும் 21 அடி அகலமும் 21 படிகளுடன் கூடிய பிரம்மாண்ட கொலு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கொலு வரும் 11-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

9 தினங்களும் இரவு 9 மணிக்கு கொலு அமைக்கப்பட்டுள்ள இடத்துக்கு முன் உள்ள வெள்ளி ஊஞ்சலில் ஸ்ரீசிவகாமசுந்தரி அம்பாளான, நவராத்திரி அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவமும், தீபாராதனையும் நடைபெற உள்ளது. இதனை காண அப்பகுதியில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி