பரங்கிப்பேட்டை அருகே பி. முட்லூர் குடிக்கால் நகரில் மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் பரங்கிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெர்மின்லதா, மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆணையாங்குப்பம் புதுத்தெருவை சேர்ந்த முபாரக் (வயது 45) மதுபாட்டில்கள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து முபாரக்கை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த 30 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.