புவனகிரி: முதியவர் சுருண்டு விழுந்து உயிரிழப்பு

கடலூர் மாவட்டம் புவனகிரி செட்டி தெருவைச் சேர்ந்த யுவராஜ், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சையில் இருந்து வந்தார். நேற்று முன்தினம் திடீரென மயக்கமடைந்து விழுந்த அவரை உறவினர்கள் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து புவனகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி