SIR படிவம் நிரப்பிக் கொடுக்காவிட்டால் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்படும் என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி கூறியிருந்தார். இந்நிலையில், இதுகுறித்து பேசியுள்ள சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம், "இந்த கருத்து வன்மையான கண்டனத்துக்குரியது. SIR என்பதே சட்டவிரோதம் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடிவெடுத்துள்ள நிலையில் வாக்காளர்களை மிரட்டும் இந்த கருத்தை அவர் திரும்பப் பெற வேண்டும்" என கூறியுள்ளார்.