கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கில் கைதான தவெகவினரை 14 நாட்கள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக இதுதொடர்பாக தவெக மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் மாவட்ட நிர்வாகி பவுன்ராஜ் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு, கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். தீவிர விசாரணை செய்த நீதிபதி, இருவருக்கும் அக்.14ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார்.