சர்வதேச கார் பந்தயங்களில் பங்கேற்று வரும் நடிகர் அஜித்துக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் புகழாரம் சூட்டியுள்ளார். இது குறித்து பேசிய அவர், "ஐரோப்பிய கார் பந்தய தொடரில் அஜித் குமாரின் அணி 3-ம் இடம் பிடித்து நம் தேசத்திற்கு பெருமை சேர்த்திருப்பது மகிழ்ச்சி. இந்த வெற்றியின் மூலம், தமிழ்நாட்டின் பெருமையையும் உலகறிய செய்திருக்கிறார் அஜித்" என்று பாராட்டியுள்ளார். மேலும், அஜித்குமாரின் அணி மென்மேலும் பல வெற்றிகளை குவிக்க மனமார்ந்த வாழ்த்துகளையும் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.