மேட்டுப்பாளையத்தில் விநாயகர் சதுர்த்தி விழா பாதுகாப்பு: ஆலோசனை

மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று (ஆகஸ்ட் 27) முதல் 29 வரை நடைபெற உள்ள விநாயகர் சதுர்த்தி விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தாசில்தார் ராமராஜ் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், போலீஸ், மின்வாரியம், நகராட்சி, தீயணைப்பு, வனம், போக்குவரத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர். விழா காலத்தில் சாலை சீரமைப்பு, மின்விளக்கு பராமரிப்பு, சுகாதார பணிகள், தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலை, சிலை பாதுகாப்பு, ஊர்வலம் மற்றும் கரைப்பு இடங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி