கோவை கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய சதீஷ், கார்த்தி, குணா ஆகிய மூன்று குற்றவாளிகளை போலீசார் காலில் சுட்டுப் பிடித்தனர். இவர்களில் சதீஷ், கார்த்தி சகோதரர்கள், குணா அவர்களது உறவினர். இவர்கள் மீது கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், இவர்கள் எந்த அரசியல் கட்சியையும் சாராதவர்கள் என்றும் மூவர் மீதும் குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்துள்ளது என்றும் கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் தெரிவித்தார்.