கருமத்தம்பட்டி: மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா!

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி ராமாட்சி பாளையம் மாகாளியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு வேள்வி விழா நேற்று தொடங்கியது. விழாவின் முதல் நாளில் கஜ பூஜை நடைபெற்றதுடன், சோளீஸ்வரர் கோவிலில் இருந்து தீர்த்தக் குடம் எடுத்து வரும் நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றது. இதில் 2,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி பரவசத்துடன் வழிபட்டனர். பின்னர் கோவில் வளாகத்தில் முதல் கால யாக பூஜை வேத மந்திரங்களுடன் சிறப்பாக நடைபெற்றது. இன்று கும்பாபிஷேகப் பெருவிழா நடைபெறவுள்ளது. கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் விழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி