சூலூர்: வனப்பகுதியில் இருந்து வந்த மானை கடித்துக்கொன்ற நாய்கள்

கோவை மாவட்டம் சூலூர் அருகே எலச்சிபாளையம் பகுதியில் வனப்பகுதியிலிருந்து வழி தவறி வந்த மான், தெரு நாய்கள் கூட்டத்தால் கடித்து குதறி பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சம்பவம் விவசாயியால் செல்போனில் பதிவு செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வனவிலங்குகள் இப்பகுதிக்குள் புகுந்து நாய்களால் தாக்கப்படுவது வழக்கமாகிவிட்டதாகவும், இது குழந்தைகளுக்கும் ஆபத்தானது என்றும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி, வனத்துறை மற்றும் உள்ளூர் அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி