கோவை: வங்கிக் கடன் பெயரில் ரூ. 25 லட்சம் மோசடி: பெண் கைது

வங்கியில் கடன் வாங்கித் தருவதாக கூறி 180 பேரிடம் ரூ. 25 லட்சம் மோசடி செய்ததாக ரூபினி பிரியா (35) என்பவர் நெகமம் போலீசாரால் நேற்று கைது செய்யப்பட்டார். ஆர். ஆர். அறக்கட்டளை என்ற பெயரில் அலுவலகம் நடத்தி, மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களிடம் ஒரு லட்சம் ரூபாய் கடனுக்கு ரூ. 4 ஆயிரம் கமிஷன் பெற்றுக்கொண்டு, கடன் வழங்காமல் ஏமாற்றியதாக அவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. கோவில்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே அவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி