கோவை மருதமலை கோவில் மைதானத்தில் உள்ள குப்பைத் தொட்டியில் காட்டு யானை உணவு தேடும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள இக்கோவிலில், ஒற்றைக் காட்டு யானை ஒன்று கோவில் படிக்கட்டுகள் வழியாக மேலேறி, அடிவாரத்தில் உள்ள குப்பைத் தொட்டியில் உணவு தேடும் காட்சி பதிவாகியுள்ளது. யானை அடிக்கடி கோவில் மற்றும் அடிவாரப் பகுதிகளில் நடமாடுவதால் பக்தர்கள் அச்சமடைந்துள்ளனர். யானையை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.