கோவை: மலைப்பாதை ஓரங்களில் பூத்துக்குலுங்கும் வெள்ளை மலர்கள்

வால்பாறை பகுதியில் குளிர்பனி காலம் தொடங்கியுள்ளது. இதனால் மலைப்பாதை ஓரங்களிலும் எஸ்டேட் பகுதிகளிலும் வெள்ளை, மஞ்சள் நிற பனிமலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. ஆண்டுதோறும் அக்டோபர் இறுதி வாரத்தில் தொடங்கும் குளிர்பனி காலம் இந்த ஆண்டும் தொடங்கி, பகலிலேயே பனிமூட்டம் நிலவுகிறது. மாலை 3 மணி முதலே கடும் குளிர் உணரப்படுகிறது. இந்தப் பனிமலர்கள் வருகிற ஜனவரி 2-வது வாரம் வரை மலர்ந்து சுற்றுலாப் பயணிகளைக் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி