கோவை: மருதமலை கோவில் - பேருந்து இல்லையென பக்தர்கள் வேதனை

கோவை மருதமலை சுப்பிரமணியசாமி கோவிலுக்குச் சென்ற பக்தர்கள் நேற்று பேருந்து வசதி இல்லாததால் நீண்ட நேரம் காத்திருக்க நேரிட்டது. மலை மீது வாகன நெரிசல் மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக விசேஷ நாட்களில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. இதனால், அடிவாரத்தில் இருந்து கோவிலுக்குச் செல்லும் பேருந்துகளை நம்பியிருந்த பக்தர்களுக்கு இந்த சிரமம் ஏற்பட்டது. ஒரு பக்தர் இதுகுறித்து செல்போனில் வீடியோ எடுத்து, கூடுதல் பேருந்துகளை இயக்க அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி