கோவை விமான நிலையம் பின்புறம், ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவியை 3 இளைஞர்கள் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. வினித் என்ற இளைஞருடன் இருந்த மாணவியை, தாக்கி கடத்திச் சென்ற குற்றவாளிகள், பாலியல் பலாத்காரம் செய்து விட்டு தப்பி ஓடியுள்ளனர். பீளமேடு காவல்துறையினர், மாணவியை நிர்வாண நிலையில் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தீவிரமாக தேடிவருகின்றனர்.