தமிழக-கேரளா எல்லையான வாளையாறு சோதனைச் சாவடி அருகே நேற்று (ஆகஸ்ட் 17) அதிகாலை கார் லாரி மீது மோதியதில் சென்னைக்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்த 7 பேர் கொண்ட குழுவில், சென்னையைச் சேர்ந்த லாவண்யா, மலர் ஆகியோர் உயிரிழந்தனர். தூக்கக் கலக்கத்தில் காரை ஓட்டியதால் இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் 3 வயது குழந்தை உட்பட நால்வர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.