பொள்ளாச்சி அருகே ஊராட்சி நிர்வாகம் திணறும் அவலம்

பொள்ளாச்சி அருகே ஜமீன்கோட்டாம்பட்டி, பட்டத்தரசி நகர் பகுதிகளில் சாலையோரங்களில் குப்பை குவிந்து துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். 150 வீடுகளுக்கு ஒரு தூய்மை பணியாளர் நியமிக்கும் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. பட்டத்தரசி நகரில் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ள நிலையில், கடந்த 5 ஆண்டுகளாக இப்பகுதி குப்பை கிடங்காக மாறியுள்ளதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், கூடுதல் தூய்மை பணியாளர்களை நியமிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி