மாயமான சிறுமி பொள்ளாச்சியில் மீட்பு

*கோவை ஒண்டிபுதூர் பகுதியில் இருந்து மாயமான சிறுமி பொள்ளாச்சியில் மீட்பு. *

நேற்று ஒண்டிபுதூர் பகுதியில் இருந்து 12 வயது சிறுமி மாயமானதாக சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் அவரது பெற்றோர் சுதாகரன் புகார் அளித்தார்.

இதைத்தொடர்ந்து மாநகர காவல் துறையினர் 5 தனி படை அமைத்து தேடி வந்தனர்.

அதேபோல அனைத்து காவல் நிலையங்களுக்கும் சிறுமியின் புகைப்படம் மற்றும் தகவல்கள் அனுப்பப்பட்டது.

இந்த நிலையில் பொள்ளாச்சி பேருந்து நிலையம் அருகே சிறுமியை மாவட்ட காவல் துறையினர் மீட்டு உள்ளனர்.

தொடர்ந்து சிறுமி மாநகர காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

பெற்றோருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

மாநகர காவல் துறையினர் சிறுமியை பெற்றோரிடம் ஒப்படைப்பர் என என முதற்கட்ட தகவல்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி