கோவை: பன்னீர்மடையில் காட்டு யானை புகுந்ததால் பரபரப்பு

கோவை மாவட்டம் பன்னீர்மடை பகுதியில் நேற்று அதிகாலை திடீரென காட்டு யானை ஒன்று ஊருக்குள் நுழைந்தது. இதைக் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து அலறியடித்து ஓடினர். இதனால் அப்பகுதியில் பெரும் குழப்பம் நிலவியது. சம்பவத்தின் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. தகவல் அறிந்த வனத்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து யானையை காட்டுக்குள் திருப்பி அனுப்பும் பணியில் ஈடுபட்டனர். இந்த திடீர் சம்பவம் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி