கோவையில் கல்லூரி மாணவி ஒருவருக்கு எதிராக நடைபெற்ற கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் சதீஷ் (30), கார்த்தி (21) இருவரும் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் குணா (20) மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் என போலீசார் தெரிவித்தனர். இவர்கள் மீது கொலை, வாகன திருட்டு உள்ளிட்ட பல குற்ற வழக்குகள் உள்ளதாகவும், சம்பவம் மது போதையில் நடந்ததாகவும், கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் இன்று தெரிவித்தார்.