வனத்துறையினர் ரோந்து வாகனத்தின் ஒலியைக் கேட்டு யானைகள் காட்டுக்குள் திரும்பியதும் கேமராவில் பதிவாகியுள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வனத்துறை கேட்டுக்கொண்டுள்ளது. இருட்டுப்பள்ளம், பெருமாள்கோவில்பதி, வளையான்குட்டை, முண்டாந்துறை போன்ற பகுதிகளில் இருசக்கர வாகனம் அல்லது நடந்து செல்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து யானைகள் ஊருக்குள் நுழைவது அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு தீர்வு காண வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விமான சேவைகள் டிசம்பர் 10-க்குள் சீராகும் என இண்டிகோ நிறுவனம் அறிவிப்பு