நடிகர் ரஜினிகாந்த் நடித்த கூலி திரைப்படத்திற்கு 'A' சான்றிதழ் வழங்கப்பட்டதால், 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், குழந்தைகளுடன் வந்த ரசிகர்கள் திரையரங்கு நிர்வாகத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பணத்தை திரையரங்கில் திருப்பி வழங்க முடியாது, BookMyShow மூலம் மட்டுமே பெறலாம் என நிர்வாகம் அறிவித்ததால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர். ஆன்லைன் டிக்கெட் தளங்களில் 'A' சான்றிதழ் குறித்து தெளிவாக அறிவிக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.