கோவை: அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடக்கிறது - செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தேர்தல் ஆணையத்திடம் அளித்த 250 பக்க கடிதத்தில் முக்கியமான விஷயங்கள் உள்ளன. அதை வெளியில் சொல்ல முடியாது. இபிஎஸ்-ன் மகன், மைத்துனன், மருமகன் என அனைவரும் கட்சியில் தலையிடுகின்றனர் என குற்றம்சாட்டினார். பாஜக உங்களை இயக்குகிறதா என்ற கேள்விக்கு, என்னை யாரும் இயக்க முடியாது என்றார். மேலும், அதிமுக தரப்பிலிருந்து தன்னிடம் பேச்சுவார்த்தை நடப்பதாகவும், ஆனால் யார் பேசுகிறார்கள் என்பதை வெளியில் கூற முடியாது என்றார்.

தொடர்புடைய செய்தி