உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு அன்னூர் பேரூராட்சியில் நேற்று 200-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்த நிகழ்ச்சிக்கு அன்னூர் பேரூராட்சித் தலைவர் பரமேஸ்வரன் தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார்.சுகாதார ஆய்வாளர் ராஜ்குமார், துப்புரவு மேற்பார்வையாளர் பிரதீப் மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் உள்ளிட்ட பலர் இந்த மரக்கன்று நடும் பணியில் பங்கேற்றனர். அன்னூர் பேரூராட்சிப் பகுதிகளில் இந்த மரக்கன்றுகள் நடப்பட்டன.