மேட்டுப்பாளையத்தில் கள்ளத்தொடர்பு காரணமாக கார் ஓட்டுநர் அலாவுதீன் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில், 1½ ஆண்டுகள் கழித்து காரமடை நகராட்சி கவுன்சிலர் ரவிக்குமார், அவரது மகன் சரண்குமார், சகோதரர் மணிகண்டன் ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர். சரண்குமாரின் மனைவி பூஜாவுடன் அலாவுதீன் கள்ளத்தொடர்பில் இருந்ததால் ஏற்பட்ட கோபத்தில், ரவிக்குமார் குடும்பத்தினர் சேர்ந்து அலாவுதீனை அடித்து கொன்று, உடலை மாதேஸ்வரன் மலைக்கோவில் பின்புறம் உள்ள காட்டுப் பகுதியில் எரித்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.