இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபரை உடனடியாக கைது செய்திருப்பது ஆறுதல் அளிக்கிறது. தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை பரபரப்பான அரசியல் செய்ய விரும்புகிறார். தமிழகத்தில் அதிமுக எதிர்க்கட்சி அல்ல, பாஜக தான் என்பதை காட்டிக் கொள்ள அவர் முயற்சி செய்கிறார். ஆளும் கட்சி மீது அவ்வப்போது குற்றம் சாட்டினால் எதிர்க்கட்சி தலைவராகி விடமுடியும் என்று அவர் நம்புகிறார்.
இந்த சம்பவத்தில் கைதான ஞானசேகரன் அரசியல் கட்சி தலைவர்களுடன் புகைப்படம் எடுத்திருக்கிறார் என்பதை காரணம் காட்டி திமுக பொறுப்பேற்க வேண்டும் என கூறுவது அப்பட்டமான அரசியல் ஆதாயச் செயல் என்று கூறினார்.