கோவை, குனியமுத்தூர் மின்பகிர்மான வட்ட அலுவலகத்தின் சார்பில் பிரதமரின் சூரிய மின்சக்தி திட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நடைபெறுகிறது. ஆத்துப்பாலம், குனியமுத்தூர், குறிச்சி, ஈச்சனாரி, மதுக்கரை, வெள்ளலூர் ஆகிய பகுதிகளில் முகாம்கள் நடைபெறும். பொதுமக்கள் கலந்துகொண்டு திட்டத்தின் பலன்களைப் பெற ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.