பேரூர்: பட்டீஸ்வரர் திருக்கோயில் - கணினி தொடுதிரை வசதி!

கோவை, பேரூர் பகுதியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க பட்டீஸ்வரர் திருக்கோயிலில், பக்தர்களின் வசதிக்காக கோவிலின் வரலாற்று தகவல்களை அறிந்து கொள்ளும் வகையில் கணினி தொடுதிரை வசதி நேற்று தொடங்கப்பட்டது. இரண்டாம் நூற்றாண்டில் கரிகால சோழனால் கட்டப்பட்ட இக்கோயிலின் சிறப்பு, சிற்பக்கலை நயம், நடராஜர் சிலை, சிவலிங்கத்தின் மீது காமதேனு கன்றின் குளம்படி தழும்பு போன்ற தகவல்களை இந்த தொடுதிரை மூலம் பக்தர்கள் அறிந்து கொள்ளலாம். கோவை திமுக வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி இந்த வசதியை துவக்கி வைத்தார்.

தொடர்புடைய செய்தி